ETV Bharat / city

ஹிஜாப் விவகாரம்: சேலத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஹிஜாப் அணிவதை தடைசெய்த கல்வி நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சேலம் மாவட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

author img

By

Published : Feb 12, 2022, 3:02 PM IST

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்த விவகாரம்

கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடைசெய்த கல்வி நிறுவனத்தைக் கண்டித்தும் அம்மாநில பாஜக அரசைக் கண்டித்தும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சேலம் மாவட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு, 'ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை, பாஜக அரசு எங்கள் உரிமைகளைப் பறிக்கிறது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக தேசத் துரோகம் நடக்கிறது' என்று முழக்கங்கள் எழுப்பினர்.

கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளருக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சேலம் மாவட்டத் தலைவர் கோவை டி.ஏ. அப்பாஸ் கூறுகையில், "மத அடையாளங்களை அணிந்துகொண்டு வரக்கூடாது என்று இஸ்லாமிய பெண்களை வகுப்புக்கு வராமல் கர்நாடக மாநில அரசு தடுக்கிறது.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்த விவகாரம்

இது திட்டமிட்டு மக்களைப் பிரிப்பதற்கான நாடகம். கல்வி நிறுவனங்களுக்கு வராமல் தடுக்கப்பட்டுள்ள அந்தப் பெண்கள் எல்லோரையும்போல சீருடை அணிந்து ஹிஜாப் என்னும் ஆடையை அணிவதால் என்ன பிரச்சினை? பிரத்யேக ஆடைகளை கூடுதலாக அணிவது ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

ஹிஜாப் அணிவதற்காக ஜனநாயக ரீதியில் போராடிவரும் இஸ்லாமிய பெண்களை இந்துத்துவா கும்பலை வைத்து ஐந்து நிமிடத்தில் கலைத்துவிடுவேன் என்று மிரட்டும் கர்நாடக மாநில எம்எல்ஏ யஷ்பால் சர்மா, ஹிஜாப் அணிய வேண்டும் என்றால் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று சொல்லும் எம்எல்ஏ யாத்னால் ஆகியோர் மீது வழக்குப்பதிய வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் கர்நாடக பாஜக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரம்: திருச்சியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.