சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, ஓமலூர் ஆகிய தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர்கள் சேர்ப்பு, இருமுறை பெயர் பதிவு உள்ளிட்ட குளறுபடிகள் சரி செய்யப்படாமல் உள்ளது என புகார் எழுந்துள்ளது.
இந்தக் குளறுபடிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சேலம் வடக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் இன்று, மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒருவரின் பெயரிலேயே இரண்டு பகுதிகளில் வாக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. முகவரி மாறியவர்களுக்கு இரண்டு இடங்களிலும் வாக்குகள் உள்ளன. இதை சரிசெய்ய ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’முதல்வர் ஆணையால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை’ - அமைச்சர் ராஜலட்சுமி