தருமபுரி : தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக, பாமக உறுப்பினர்கள் கடந்த எட்டு மாதங்களாக நிதி ஒதுக்கப்படமால் உள்ளதாகவும், நிதி இல்லாததால் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் பிரச்சினையை கூட தீர்த்து வைக்க முடியவில்லை என்று தெரிவித்தனர். இதனால் பொதுமக்களை சந்திக்க முடியாத நிலை உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.
ஏரியூா் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பேசும் போது, பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை நிலவி வருவதாகவும், தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க நிதி ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தனி சிறப்பு அலுவலர்கள் பணியாற்றிய காலத்தில் செய்த வேலைகளுக்கு இன்னும் நிதி வராததால் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாக அலுவலர்கள் பதிலளித்தனர்.
ஊராட்சி குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் பொதுமக்களின் அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என உறுப்பினா்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க : கோவிட் நோயாளிகளுக்கு இழப்பீடு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!