சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறயிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் தேவையான பொருட்கள் தயார்படுத்துதல், வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ.ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ.ராமன் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளவாறு, வாக்குபதிவிற்கு தேவையான 72 பொருட்களையும் உரிய அலுவலர்கள் முறையாக பிரித்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டையில் ஒரு அத்திப்பட்டி !
மேலும், ஊராட்சி ஒன்றிய தேர்தளில் பதிவான வாக்குகள் உள்ள பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், முழுமையாக வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை முழுமையாக மேற்கொள்ளவேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மேட்டூர் சார் ஆட்சியர் ஜி.சரவணன், ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் குமரன், மேட்டூர் வருவாய் வட்டாட்சியர் சு.ஹசீன்பானு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.