ETV Bharat / city

'சோதனை மேல் சோதனை... ஆனாலும் சாதனை' - பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி

என்னைப் போல எந்த ஒரு முதலமைச்சரும் சோதனையை அனுபவித்தது இல்லை. அந்த அளவுக்குச் சோதனைகளை அனுபவித்தேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை
சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை
author img

By

Published : Apr 3, 2021, 8:27 AM IST

சேலம்: கோட்டை மைதானத்தில் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "சேலம் மாவட்டம் அதிமுக கோட்டையாகத் திகழ்ந்துவருகிறது. நான் இந்த மண்ணைச் சேர்ந்தவன். கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவி செய்வேன். திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி, அவரது மகன் உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் என அனைவரும் சேலத்தைச் சுற்றிச் சுற்றிவருகின்றனர்.

சோதனை மேல் சோதனை

என்னைப்போல எந்த ஒரு முதலமைச்சரும் சோதனையை அனுபவித்தது இல்லை. அந்த அளவுக்குச் சோதனைகளை அனுபவித்தேன். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதன் பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கும் சமயத்தில் திமுகவினர் என் மீதும், அமைச்சர்கள் மீதும் புத்தகங்களைத் தூக்கிவீசினர்.

சில திமுக உறுப்பினர்கள் எனது இருக்கை, அமைச்சர்கள் இருக்கைகள் மீது ஏறிநின்று நடனமாடினர். சட்டப்பேரவை என்பது புனிதமான இடமாகும். புனிதமான இடத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை திமுகவினர் செய்தனர்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என மக்கள் யோசிக்க வேண்டும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தோம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக்கொண்டு சாலையில் அமர்ந்தார்.

சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை

திமுகவின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி

திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கலைஞர் டிவிக்கு பல நூறு கோடி கைமாறிய வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் நடந்துவருகிறது.

விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக. கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போதுதான் ஊழல் என்ற சொல் பிறந்தது. கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்தார்கள். திருநெல்வேலியில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு டெண்டர் ரத்தான நிலையில் எப்படி ஊழல் செய்ய முடியும்.

அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுத்த அதிமுக அரசு

திமுக தப்பித் தவறி வந்தால் அரசு அலுவலர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் மூலம் ஆண்டுக்கு 14 ஆயிரத்து 400 கோடி வழங்கியுள்ளோம். கரோனா காலத்தில் பிடித்தம் இல்லாமல் முழுச் சம்பளம் கொடுத்தோம்.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போது, தமிழ்நாட்டில் உயர்த்தி வழங்கினோம். அரசு ஊழியர்களுக்கு வீடு வாங்க சலுகை வழங்கினோம். ஆனால் அரசு ஊழியர்கள் எதையும் நினைத்துப் பார்க்காமல் உள்ளனர்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு

அதிமுக அரசு சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக விளங்குகிறது. கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, மாமூல் இல்லாத ஆட்சி அதிமுக அரசாக உள்ளது. இஸ்லாமியர்களுக்கு ஹஜ் புனிதப் பயணத்திற்கு 10 கோடி ரூபாய் உயர்த்தி வழங்கிஉள்ளோம். ஹஜ்ஜில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்பட்டுவருகிறது.

நாகூர் தர்கா குளத்தை 4.34 கோடி ரூபாயில் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல 31 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கினோம். இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் ஏழாயிரம் கோயில்கள் சீர்செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.