ETV Bharat / city

சந்திராயன்-2 விண்கலத்துக்கு சேலத்தில் இருந்து உதிரி பாகங்கள்..! - சந்திராயன்-2

சேலம்: சந்திராயன்-2 விண்கலத்தின் பாகங்கள், சேலத்திலுள்ள அரசின் செயில்(SAIL) நிறுவனத்தின் தகடுகளால் உருவாக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சந்திராயன்-2 விண்கலத்துக்கு சேலத்தில் இருந்து உதிரி பாகங்கள்..!
author img

By

Published : Jul 15, 2019, 9:07 AM IST

சேலம் செயில் நிறுவனத்தின் சார்பில் கடுங்குளிரைத் தாங்கி நிற்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட தகடுகளை ஏந்தி சந்திரயான்-2 விண்கலம் நிலவில் பயணிக்க இருந்தது. சேலம் செயில் நிறுவனத்தில், இஸ்ரோவிற்கு தேவையான ரஷ்ய தரமான ஐசிஎஸ்எஸ்/1218/321 வகை ஆஸ்டெனிக் நிலைப்படுத்தப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை, கடுங்குளிர் (கிரையோஜெனிக்) ஏவுகணை எந்திரம் தயாரிப்புக்கு உபயோகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் திரவ உந்துதல் அமைப்பு மையம் (எல்.பி.எஸ்.சி.) விஞ்ஞானிகள், செயிலின் சேலம் உருக்காலை குழுவினர் இணைந்து சோதனை முறையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சுருள்களைத் தயாரித்தனர். வெப்ப உருட்டப்பட்ட இந்த 4 மி.மி. தடிமன் சுருள், பிறகு இஸ்ரோவின் தேவைக்கேற்ப 2.3 மி.மி. தடிமனுக்குக் குளிரூட்டப்பட்டுள்ளது. சந்திரயான் தவிர மற்ற பயணங்களுக்கும் இந்த 2.3 மி.மி. தடிமன் தகடானது, கிரையோஜெனிக் எந்திரத்தின் சிஇ20-க்கும் உபயோகப்படுத்தப்பட்டது.

இதுதவிர மேலும் ஐந்து எஞ்சின்களை சேலம் உருக்காலை தயாரித்த 321 தரத்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளால் உருவாக்கப்பட்டன என, சேலம் உருக்காலை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Intro:நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது சந்திராயன்-2 விண்கலம், சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளால்உருவாக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Body:

சேலம் செயில் நிறுவனத்தின் சார்பில் கடுங்குளிரை தாங்கி நிற்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட கடுங்குளிரை தாங்கி நிற்கும் தடிமன் தகடுகளை ஏந்தி சந்திரயான்}2 விண்கலம் நிலவில் பயணிக்கிறது.சேலம் செயில் நிறுவனத்தில், இஸ்ரோவிற்கு தேவையான ரஷ்ய கிரேடான ஐசிஎஸ்எஸ்}1218}321 வகை ஆஸ்டெனிக் நிலைப்படுத்தப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை, கடுங்குளிர் (கிரையோஜெனிக்) ராக்கெட் எஞ்சின் தயாரிப்புக்கு உபயோகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இஸ்ரோவின் திரவ உந்துதல் அமைப்பு மையம் (எல்.பி.எஸ்.சி.) விஞ்ஞானிகள், செயிலின் சேலம் உருக்காலை குழுவினர் இணைந்து சோதனை முறையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சுருள்களை தயாரித்தனர்.வெப்ப உருட்டப்பட்ட இந்த 4 மி.மி. தடிமன் சுருள், பிறகு இஸ்ரோவின் தேவைக்கேற்ப 2.3 மி.மி. தடிமனுக்கு குளிரூட்டப்பட்டுள்ளது.சந்திரயான் தவிர மற்ற பயணங்களுக்கும் இந்த 2.3 மி.மி. தடிமன் தகடானது, கிரையோஜெனிக் எஞ்சினின் சிஇ20}க்கு உபயோகப்படுத்தப்பட்டது.இதுதவிர மேலும் 5 எஞ்சின்கள் சேலம் உருக்காலை தயாரித்த 321 கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளால் உருவாக்கப்பட்டன என சேலம் உருக்காலை நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Conclusion:இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் மைல்கல்லாக விளங்கும் சந்திராயன்-2 ஆய்வு விண்கலம் சேலம் இரும்பு உருக்காலையில் தயாரிக்கப்பட்ட தகடுகளால் வடிவமைக்கப்பட்டது என்பது சேலத்திற்கு கிடைத்துள்ள வரலாற்று பெருமை ஆகும்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.