ETV Bharat / city

காட்டுப்பன்றி வேட்டையாடிய 3 பேர் அதிரடி கைது - 3 arrested for poaching wild boar in salem

சேலத்தில் வனப்பகுதியில் அத்துமீறி காட்டுப்பன்றியை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

காட்டுப்பன்றி வேட்டையாடிய 3 பேர் அதிரடி கைது

author img

By

Published : Mar 28, 2022, 8:29 PM IST

சேலம்:சேலம் மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டி வனப்பகுதியில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் இன்று (மார்ச் 28) காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, காட்டுப்பன்றியை வேட்டையாடி, வெட்டிக்கொண்டிருந்த மூன்று பேரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஓமலூர் தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, ராமசாமி மற்றும் மூர்த்தி என்பதும், மூன்று பேரும் இலந்தை மரத்து ஓடை பகுதியில், இரும்புக் கம்பிகள் மூலம் கண்ணி வைத்து 20 கிலோ எடையுள்ள ஆண் காட்டுப்பன்றியை வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த வனத்துறை அலுவலர்கள் அவர்களிடமிருந்த இறைச்சியையும், காட்டுப்பன்றியை வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சேலம் மாவட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் 24 மணி நேர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஈரோடு பள்ளியில் கொடுமை; குழந்தைகளை கழிவறை சுத்தப்படுத்த வைக்கும் ஆசிரியை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.