மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் நண்பர்கள் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்டத் தகராறு காரணமாக, இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் நேற்று 2 பேரை கைது சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அக்கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், லட்சுமணன். இவரது மகன் அய்யம்பாண்டி (21).
மதுபோதையில் தகராறு: நேற்று முன்தினம் (ஏப்.10) மாலை இவரது நண்பர்களான மூணாண்டிபட்டியைச் சேர்ந்த சசி மற்றும் கருவாயன் (எ) வசந்த் ஆகியோருடன் சேர்ந்து தோப்பூர் வீட்டு வசதி வாரியத்திற்குச்சொந்தமான சேட்டிலைட் சிட்டி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டுள்ளனர்.
கத்திக்குத்து: பின்னர், அய்யம்பாண்டி அங்கிருந்து கூத்தியார்குண்டு விலக்கு அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் நிற்கும்போது அங்கு வந்த சசியும், வசந்த்தும் மீண்டும் தகராறு செய்துள்ளனர். இதில் மூவருக்கும் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஆத்திரமுற்ற சசி, அய்யம்பாண்டியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அய்யம்பாண்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழவே நண்பர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.
மேலும், சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சசி மற்றும் கருவாயன் (எ) வசந்த் ஆகிய இரண்டு பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த 10ஆம் தேதி இரவு கொலை நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு