ETV Bharat / city

மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்திலும் இந்தி திணிப்பா.. சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் - Inspire She

கடந்த 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை மறந்த ஒன்றிய அரசு, 'இளம் சாதனை மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்திலும் இந்தியை திணிப்பதாக' சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 1, 2022, 3:52 PM IST

மதுரை: ஒன்றிய அரசு, 'கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (Kishore Vaigyanik Protsahan Yojana) கல்வி உதவித் தொகை' தகுதித் தேர்வுக்கான கேள்வித்தாள்களை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் வழங்குவதாக கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பில் கேள்வித் தாள்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் எனத் திட்ட தகவல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (செப்.1) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கடந்த 2021ஆம் ஆண்டு 'கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (Kishore Vaigyanik Protsahan Yojana) கல்வி உதவித் தொகை'க்கான தகுதித் தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தினேன்.

அப்பிரச்னையில் ஒன்றிய அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் “அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வழங்கப்படும்” என உறுதி அளித்தது. இப்போது அந்த திட்டமே "இன்ஸ்பையர் சி" (Inspire She) என்ற திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது.

"செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம்" (PM Young Achievers Scholorship Award Scheme for Vibrant India) பயன் பெறுவதற்கான தகுதித் தேர்வு 11.09.2022 அன்று நடைபெறவுள்ளது.

இது 9ஆவது வகுப்பு 11ஆவது வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோர், கல்வி ரீதியாக பிற்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம் ஆகும். இந்த தேர்வுக்கான கேள்வித்தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என "திட்ட தகவல் அறிக்கை" ( Information Bulletin - page 8) மற்றும் "பொது அறிவிக்கை"யில் (Public Notification - 27.07.2022) கூறப்பட்டுள்ளது.

அடித்தள மாணவர்கள் பயன்பெற என ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் கேள்வித்தாள் தருவேன் என்பது என்ன நியாயம்? கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இந்தி பேசும் மாநில மாணவர்களோடு போட்டிப்போடுவார்கள்? இது அப்பட்டமான பாரபட்சம்; அநீதி.

ஒன்றிய அறிவியல் மற்றும் தொழி்ல் நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

இது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது; மொழி உரிமை தொடர்பானது. தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டுமென்று கேட்டு ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க ஆலோசனைக் குழுவில் 2 இந்திய வம்சாவளியினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.