மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுக் கருத்தரங்கம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் உலகில் உள்ள 10 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்.
மதுரை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மனிதவள வல்லுநர்களின் கருத்தரங்கம் குறித்து துணைத் தலைவர் கணேச நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் தென்தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி மாபெரும் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கான மனித வள திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
அக்கருத்தரங்குக் கூட்டத்தில் தேசிய அளவில் உள்ள மனிதவள வல்லுநர்கள் கலந்து கொண்டு, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த திறன் மேம்பாட்டு மாநாட்டின் வாயிலாக மாணவர்களுக்கு எவ்வாறான வேலை வாய்ப்பினை உருவாக்குவது, அதற்குப் பொருத்தமான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற கருத்துகள் அமையப் பெறும். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அதேபோல கருத்தரங்கில் அமேசான், ஃபேஸ்புக், பே-பால், ஹூண்டாய், ஷெல், டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் என பல முன்னணி நிறுவனங்களிலிருந்து மனிதவள மேம்பாட்டு வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். இதன்மூலம் பொறியியல் படித்த மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு எந்தவிதமான திறமைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு புரிந்துணர்வு ஏற்படும் எனக் கூறினார்.
இதையும் படிங்க:
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மதுரை காமராசர் பல்கலை.யில் தொழில் துறை மேம்பாட்டு மையம்!