ETV Bharat / city

சரக்கு வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மதுரையில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
author img

By

Published : Apr 13, 2022, 2:41 PM IST

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு ஜீவாநகர் சந்திப்பில் கடந்த 10ஆம் தேதி பிற்பகல் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 75 வயது முதியவர் சுப்புராம் மற்றும் அசோகன் ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் சரக்கு வாகன ஓட்டுநர் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமான சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விபத்து நடைபெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: BEAST FDFS: ரத்தம் சொட்ட...சொட்ட... கைதான விஜய் ரசிகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.