மதுரையில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி 2 ஆண்டுகளாக லிவிங்-டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, திருமணம் செய்ய வலியுறுத்தியபோது, தலைமறைவாகிவிட்டாக திருநங்கை ஒருவர் அந்த இளைஞரின் வீட்டின் முன்பு தாலிக் கயிறுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநிதி, இவரும் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (எ) விவேக் என்ற இளைஞரும் ஒரே கோயில் பூசாரிகளாக இருந்தனர். அப்போது இருவருக்கும் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழந்துவந்துள்ளனர். 3 மாதங்களுக்கு முன் திடீரென தங்கதுரை தலைமறைவாகி உள்ளார்.
மற்றுமொரு பெண்ணுடன் திருமணம்: இதுகுறித்து ஸ்ரீநிதி தங்கதுரையின் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது தங்கதுரை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதனால் மிகுந்த மனவருத்தம் அடைந்த ஸ்ரீநிதி, மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் லீவிங்-டூ-கெதரில் வாழ்ந்த பூசாரி தங்கதுரையை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாலமேடு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இருப்பினும் உரிய விசாரணை நடத்தாததால், ஸ்ரீநிதி அந்த இளைஞரின் வீட்டின் முன்பாக தாலிக் கயிறுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையறிந்த சோழவந்தான் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து ஸ்ரீநிதியிடம் இரு நாட்களில் விசாரணையை முடிப்பதாக நம்பிக்கை அளித்து, அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் லோன் மோசடி... ஒரு நாளைக்கு 45,000 பேரிடம் மோசடி... சிக்கிய வொர்க் பிரம் ஹோம் கும்பல்...