ETV Bharat / city

டிக் டாக் வீடியோவால் ஆயுதப்படை துணை ஆணையர் பணியிட மாற்றம் - madurai armed reserve commissioner

மதுரை ஆயுதப்படைப் பிரிவில் துணை ஆணையர் டிக் டாக் வீடியோ வெளியான நிலையில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஆயுதப்படை துணை ஆணையரின் வீடியோ
ஆயுதப்படை துணை ஆணையரின் வீடியோ
author img

By

Published : Oct 7, 2021, 5:54 PM IST

Updated : Oct 7, 2021, 7:37 PM IST

மதுரை: ஆயுதப்படை பிரிவில் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் சோமசுந்தரம். சில தினங்களுக்கு முன்னர் உடம்பில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு, ஆயில் மசாஜுக்குத் தாயாராக இருந்த அவர் ஆயுதப்படை இசைக்குழுவிலுள்ள காவலரை அழைத்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் எனத் தெரிகிறது, அவரது பாடல் ஒன்றை புல்லாங்குழலில் காவலரை இசைக்கவைத்து ரசித்துக்கொண்டே மது அருந்தியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதலங்களில் வைராலனது.

இன்னும் மூன்று மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த ஆயில் மசாஜ் வீடியோவால் கூடுதலாக அவரது பணிக்காலம் நீட்டிக்பட்டது.

இது குறித்து மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கூறுகையில், “அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சையான வீடியோ வெளியாகி பெரும் அதிர்சியில் இருந்த சோமசுந்தரத்திற்கு அடுத்த இடியாக மற்றொம் சில டிக் டாக் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

ஆயுதப்படை துணை ஆணையரின் வீடியோ

இதனைக் கண்ட உயர் அலுவலர்கள், ‘வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே’ என்ற பாடலுக்கு டிக் டாக் செய்த சோமசுந்தரத்தை வச்சு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: போலீஸ் ரோந்து வாகனம் உடைப்பு: முக்கியக் குற்றவாளி கைது

Last Updated : Oct 7, 2021, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.