மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் வசதிக்காக பகல் நேர சென்னை பயணத்திற்கு ஏதுவான ரயில் போக்குவரத்தில் வைகை எக்ஸ்பிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
இந்நிலையில், மதுரையில் இருந்து காலை வழக்கமாக புறப்படும் வைகை விரைவு ரயில், இன்று (ஜூலை 30) காலை 7:10 மணிக்கு கிளம்ப வேண்டிய நிலையில் 7.15 வரை நடைமேடைக்கு வராமல் இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.
மேலும், 7:20க்கு நடைமேடைக்கு வந்த வைகை எக்ஸ்பிரஸ் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக 7:40க்கு சென்னை புறப்பட்டது. இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில் தொழில்நுட்ப சிக்கலால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட 2 ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் மீது வழக்குப்பதிவு!