ETV Bharat / city

கரோனா பரவல்... ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு - அரசு விளக்கம் - ரவிச்சந்திரன் பரோல் விவகாரம்

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதம் பரோல் வழக்குமாறு அவரது தரப்பிலிருந்து கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு கரோனா பரவலை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

highcourt madurai bench
உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை
author img

By

Published : Mar 17, 2021, 2:34 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார். இந்த வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்தின் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது.

கரோனா நோய் தொற்று சிறைவாசிகளுக்கும் பரவிய நிலையில், எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால பரோல் வழங்கக்கோரி மனு அனுப்பினேன். அதனை ரத்து செய்து விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கும் இரண்டு மாத கால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது "கரோனா நோய்த்தொற்று பரவிவரும் சூழலில், ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க இயலாது. அதோடு தற்போதைய சூழலில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதும் இயலாதது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, "மத்திய அரசின் செயல் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் காரணத்தை ஏற்கனவே நீதிமன்றம் நிராகரித்துள்ளது" என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், "ஏற்கனவே தாயாரின் கண் அறுவை சிகிச்சைக்காக விடுப்பு கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டது என கூறப்பட்டது. இதையடுத்து, அரசு தரப்பில் அந்த மனுவும் நிலுவையில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அந்த மனு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இரண்டு ஐஏஎஸ் அலுவலர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஜமீன்தார்கள்போல் செயல்படுவதாக நீதிபதிகள் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.