மதுரை: மதுரையில் ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபகவந்த் குபா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'மதுரை அரசு பயணியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது.
மதுரையில் 4.44 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் 2024ஆம் ஆண்டு நிறைவடையும். தற்போது வரை 1.97 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுமைக்கும் உரத் தட்டுப்பாடுகள் இல்லை.
மாநில அரசின் தேவைக்கு ஏற்ப யூரியா உள்ளிட்ட உரங்கள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. அவை செயல்பட்டது குறித்த புள்ளி விவரங்களும் உள்ளன' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட்டில் மதிப்பெண் குறைந்த விவகாரம்: மாணவிக்கு அசல் விடைத்தாளைக் காட்ட உத்தரவு!