ETV Bharat / city

'திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது' - வெடித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! - மதுரை விமான நிலையம்

மதுரை: 'திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்ட ஆத்திகராகவே இருந்திருப்பார். நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Thiruvalluvar had no chance to be an atheist
author img

By

Published : Nov 6, 2019, 5:49 PM IST

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் பின்வருமாறு:

உள்ளாட்சித் தேர்தல்:-
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: 'ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் பொறுத்தவரையில் அதிமுக-விற்கு சாதகமாகத்தான் இருக்கும். மக்கள் மனநிலையயும் அவ்வாறு மாறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் நல்லாட்சி தொடரும்'.

திருவள்ளுவர் விவகாரம்:-
கேள்வி: தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளுவரை வடநாட்டவர்கள் மதச்சாயம் பூசி வருகின்றனர் என்று திமுகவின் ஆ.ராசா கூறியுள்ளாரே?
பதில்:
'திருவள்ளுவர் நிச்சயமாக கடவுள் பக்தி கொண்டவராக தான் இருக்க முடியும். அவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது. திருவள்ளுவர், திருக்குறளில் கூறிய உள்ளார்ந்த கருத்துக்களைப் பார்க்கும் போது இந்து மதப்பற்றாளராகத்தான் இருப்பார். திருவள்ளுவர் மீது பற்றுள்ளவர்களும், அவர் மீது பாசமுள்ளவர்களும் தங்களுக்குரிய பாணியிலேயே தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அவரை வாழ்த்தி வரவேற்று வழிபடுவது அவர்களது உரிமை.
ஆகவே வடக்கு, தெற்காக இருந்தாலும் திருவள்ளுவரின் புகழ் இறைவழிபாடு கொண்டவர்களின் குரலாகத்தான் இருந்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து'.

உலகப் பொதுமறை:-
கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே?
பதில்:
'அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி வருகின்றனர். அதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நானும் நம்புகிறேன்'.

வெளிநாட்டுப் பயணம்:-
கேள்வி: துணை முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் எவ்வாறு அமையப் போகிறது?
பதில்:
'முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் எவ்வாறு நாட்டிற்கு பயனாக இருந்ததோ, அதேபோல் துணை முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணமும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துறை சார்ந்த திட்டங்களுக்கும் பயனுள்ளதாக நிச்சயம் அமையும்'.

ஆவின் விவகாரம்:-
கேள்வி: ஆவின் தலைவராக தமிழரசன் தேர்ந்தெடுக்கப்பட்டது தவறானது என்ற குற்றச்சாட்டு எழுகிறதே?
பதில்:
'உயர் நீதிமன்ற நீதிபதி ஏற்கெனவே கூறியுள்ளபடி தேர்தல் முறையில், ஆறு கூட்டுறவு ஒன்றியங்களில் தலைவர்களுக்கான தேர்தல், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதலமைச்சரின் அனுமதியோடு பதவி ஏற்பார்கள்'.

பெயர் குழப்பம் தவறில்லை:-
கேள்வி: ஸ்டாலின் திருவள்ளுவருக்குப் பதிலாக தந்தை பெரியார் என பிள்ளையார்பட்டியில் கூறினாரே?
பதில்:
'மு.க.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது. பதற்றத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். குறிப்பாக திருமண இல்லத்திற்கு சென்றிருந்தபோது மணமகன் பெயருக்குப் பதிலாக மாமனார் பெயரைக் கூறினார்.
இவ்வாறு பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அதனைக் குறை கூறவேண்டியது இல்லை. அது உடல் ரிதீயான பிரச்னையாக கருத வேண்டும். வயது முதிர்வின் காரணமாக அனைவருக்கும் மறதி இருக்கத்தான் செய்யும். அது ஒரு தவறு கிடையாது'.

தேர்தல் வியூகம்:-
கேள்வி: உள்ளாட்சித் தேர்தல் கூட்டம் எந்த நிலையில் உள்ளது?
பதில்:
'உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டம் தற்போது நடைபெற உள்ளது. அதில் தற்போது பங்கேற்க உள்ளேன். அந்த கூட்டத்தில் எவ்வாறு வியூகம் அமைப்பது, வெற்றியை எவ்வாறு தேடுவது, எதிர்க்கட்சிகளின் பொய் பரப்புரையை மீறி உண்மையை எவ்வாறு மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது குறித்து விவாதிப்பது பிரதானமாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக இருக்கும்'.

மேயர் விவகாரம்:-
கேள்வி: கூட்டணிக் கட்சியான பாஜக இரண்டு மேயர் இடங்கள் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறதே?
பதில்:
'மேயர் இடங்களைப் பொறுத்தவரையில் எத்தனை இடங்கள் வழங்க வேண்டுமென்ற முடிவுகள் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு. அவர்களின் முடிவு எதுவானாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதிமுக., அதன் கூட்டணி கட்சி வெற்றிக்காகப் பாடுபடுவோம்'.

ஆசியன் மாநாடு:-
கேள்வி: ஆசியன் (ஆசிய நாடுகள் மாநாடு) கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திடாதது ஏன்?
பதில்:
'கையெழுத்திட்டால் பாதிப்பு வரும் என்பதனாலேயே தான் பிரதமர் கையெழுத்திடவில்லை. ஆகையால் அது நல்ல செயல்தான். முதலமைச்சர் எடப்பாடி ஆக இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடியாக இருந்தாலும் நாட்டு மக்களின் நன்மைக்காகத்தான் உழைத்து வருகின்றனர். இவர்கள் சாமானிய நிலையில் இருந்துதான் இப்பதவிக்கு வந்திருக்கிறார்கள். ஆகையால், அடித்தட்டு மக்களின் நிலைமை அவர்களுக்கு தெரியும்'.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுடச்சுட பதில் அளித்தார்.

இதையும் படிங்க: 'சீனி சக்கரை சித்தப்பா, பேப்பரில் எழுதி நக்கப்பா!' - காங்கிரசை பங்கம் செய்த ராஜேந்திர பாலாஜி

Intro:*திருவள்ளுவர் திருக்குறளில் கூறிய உள்ளார்ந்த கருத்துக்களை பார்க்கும் பொழுது அவர் இந்துமத பற்றாளராகத்தான் இருப்பார் - பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி*Body:*திருவள்ளுவர் திருக்குறளில் கூறிய உள்ளார்ந்த கருத்துக்களை பார்க்கும் பொழுது அவர் இந்துமத பற்றாளராகத்தான் இருப்பார் - பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி*

*தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

*உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு*

ஏற்கனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பை பொருத்தவரையில் அண்ணா திமுகவிற்கு சாதகமாகத்தான் மக்கள் மனநிலை மாறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் நல்லாட்சி தொடரும்.

*தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளுவரை வடநாட்டவர்கள் மதச்சாயம் பூசி வருகின்றனர் என்று திமுக அ.ராசா கூறியது குறித்த கேள்விக்கு*

திருவள்ளுவர் நிச்சயமாக கடவுள் பக்தி கொண்டவராக தான் இருக்க முடியும் அவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது. அவர் திருக்குறளில் கூறிய உள்ளார்ந்த கருத்துக்களை பார்க்கும் பொழுது இந்துமத பற்றாளராகத்தான் இருப்பார் என்பதன் அடிப்படையில்தான் என்னைப் போன்றோர் கருத வாய்ப்புள்ளது.

அவர் திருவள்ளுவர் மீது பற்றுள்ளவர்கள் அவர் மீது பாசம் உள்ளவர்களும் தங்களுக்குரிய பாணியிலேயே தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அவரை வாழ்த்தி வரவேற்பது வழிபடும் என்பது அவர்களது உரிமை.

ஆகவே வடக்கு, தெற்காக இருந்தாலும் திருவள்ளுவரின் புகழ் இறைவழிபாடு கொண்டவர்களின் குரலாகத்தான் திருவள்ளுவரின் நடைமுறை இருந்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

*திருக்குறளை பொருத்தவரையில் உலகப் பொது மறையை நூல் ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்ற கேள்விக்கு*

அவர் மதங்கள் குறித்து எழுத வில்லை, எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இது குறித்த ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆகவே அவர் இந்துவாக தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி வருகின்றனர் அதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நானும் நம்புகிறேன்.

*துணை முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு*

முதல்வரின் வெளிநாட்டு பயணம் எவ்வாறு நாட்டிற்கு பயனாதாக இருந்ததே அதேபோல் துணை முதல்வரின் வெளிநாட்டுப் பயணமானது தமிழ்நாட்டு மக்களுக்கும் துறை சார்ந்த திட்டங்களுக்கு பயனுள்ளதாக நிச்சயமாக அமையும்.

*ஆவின் தலைவராக தமிழரசன் தேர்ந்தெடுக்கப்பட்டது தவறானது என்ற வழக்கு குறித்த கேள்விக்கு*

உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்கனவே கூறியுள்ள முறையே தேர்தல் நடத்தி தேர்வு செய்து கொள்ளுமாறு என்றும் எனவே தேர்தல் ஆணையம் 6 கூட்டுறவு ஒன்றியங்களில் தலைவர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் முதலமைச்சரின் அனுமதியோடு அவர்கள் வெற்றி பெற்ற பிறகு பதவி ஏற்பார்கள்.

*ஸ்டாலின் திருவள்ளுவருக்கு பதிலாக தந்தை பெரியார் என பிள்ளையார்பட்டியில் கூறியது குறித்த கேள்விக்கு*

ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகின்றது அல்லது பதற்றத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். குறிப்பாக திருமண இல்லத்திற்கு சென்றிருந்தபோது மணமகன் பெயருக்கு பதிலாக மாமனார் பெயரை கூறினார்.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்து வருகிறது அதனை குறை கூறவேண்டியது இல்லை. அது உடல் ரீதியான பிரச்சனையாக கருதவேண்டும், வயது முதிர்வின் காரணமாக அனைவருக்கும் இருக்கத்தான் செய்யும் அது ஒரு தவறு கிடையாது.

*உள்ளாட்சி தேர்தல் கூட்டம் குறித்த கேள்விக்கு*

தற்போது அதற்கான கூட்டம் நடைபெற உள்ளது அதில் தற்போது பங்கேற்க உள்ளேன் அந்த கூட்டத்தில் எவ்வாறு வியூகம் அமைப்பது வெற்றியை எவ்வாறு தேடுவது மற்றும் பொய் ஒரு புறம் கூறிக் கொண்டு வரும் அவற்றை மீறி உண்மையை எவ்வாறு மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது குறித்து கூறி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக இருக்கும்.

*கூட்டணி கட்சியான பாஜக இரண்டு மேயர் இடங்கள் கேட்டிருப்பது குறித்த கேள்விக்கு*

மேயர் இடங்களை பொருத்தவரையில் எத்தனை இடங்கள் வழங்க வேண்டுமென்ற முடிவுகள் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு முதல்வருக்கு தான் உண்டு. எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதிமுக வின் வெற்றிக்காகவும், கூட்டணி கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவோம்.

*அசியன் கூட்டத்தில் பிரதமர் கையெழுத்திடாதது குறித்த கேள்வி*

கையெழுத்திட்டால் பாதிப்பு வரும் என்பதனாலேயே தான் பிரதமர் கையெழுத்திடவில்லை ஆகையால் அது நல்ல செயல்தான். முதல்வர் எடப்பாடி ஆக இருந்தாலும் பிரதமர் மோடி ஆக இருந்தாலும் நாட்டு மக்களின் நன்மைக்காகத்தான் உழைத்து வருகின்றனர். இவர்கள் சாமானியர்கள் தான் இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆகையால் அடித்தட்டு மக்களின் நிலைமை இவர்களுக்கு தெரிந்ததுதான். பிரதமரும் முதல்வரும

என்றார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.