ETV Bharat / city

முருகனின் முதல்படைவீட்டில் முத்தாய்ப்பாக நடந்த தெப்பத் திருவிழா! - திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா

மதுரை; முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா
author img

By

Published : Feb 5, 2020, 2:57 PM IST

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவினையொட்டி முருகன் தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க குதிரை, அன்ன வாகனம், தங்க மயில் வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றைய முன்தினம் தெப்பமூட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகன் தெய்வானையுடன் பதினாறுகால் மண்டபத்தில் உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று உற்சவர் சன்னதியில் உள்ள முருகன் மற்றும் தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சப்பரத்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதக்கும் தேரில் முருகன் மற்றும் தெய்வானை தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிதத்தனர்.

இதையும் படிங்க;

தலைவியாக மாறி கடல் அலையை முத்தமிட்ட கங்கனா!

Intro:*ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை தெப்ப திருவிழா நடைபெற்றது*Body:*ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை தெப்ப திருவிழா நடைபெற்றது*

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா கொண்டாடுவது வழக்கம் நடப்பு ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினையொட்டி முருகன் தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க குதிரை, அன்ன வாகனம், தங்க மயில் வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பமூட்டு தள்ளுதல் தை கார்த்திகை தினமான நேற்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை சுவாமி தெய்வானையுடன் பதினாறுகால் மண்டபத்தில் உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.

அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றிவந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு முருகன் தெய்வானை அருள்பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக தெப்பத்திருவிழா இன்று தெப்பத்தில் முருகன் தெய்வானையுடன் எழுந்தருளி அருள் பாலிதத்தார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலவர் பாறைகளில் குடைந்து உருவாக்கப்பட்டதால் முருகனின் வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உற்சவர் சன்னதியில் உள்ள முருகன் மற்றும் தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சப்பரத்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் தெப்பத்திருவிழாகாக செய்யப்பட்ட மிதக்கும் தேரில் முருகன் மற்றும் தெய்வானை பக்தர்கள் வடம் பிடிக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிதத்தார்.

அதே போல் இன்று மாலை 6 மணி அளவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதக்கும் தேரில் முருகன் மற்றும் தெய்வானை பக்தர்கள் வடம் பிடிக்க மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிதத்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.