மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த குட்டீஸ் என்பவரது மகன் பாலமுருகன் (18). இவர் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடு நெஞ்சுப் பகுதியில் முட்டியதில் படுகாயம் அடைந்தார்.
பின், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை இராசாசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாலமுருகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு