ETV Bharat / city

மனைவி இறந்ததாக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட்ட கணவர் - குற்றச் செய்தி

மதுரை அருகே மனைவி இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படத்தை வெளியிட்டு, இரண்டாம் திருமணம் செய்த கணவர் மீது முதல் மனைவி காவல் துறையில் புகார் அளித்தார்.

மனைவி இறந்ததாக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படத்தை வெளியிட்ட கணவர்

author img

By

Published : Apr 30, 2022, 2:14 PM IST

மதுரை: அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா(23) என்பவருக்கும், சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(30) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே பாலகிருஷ்ணன் தனது பணியின் காரணமாக வெளிநாடு சென்றுவிட்டு கடந்த ஆண்டு நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, மோனிஷா தனது தாய்வீட்டில் வசித்து வருகிறார்.

இதன் காரணமாக கணவர் பாலகிருஷ்ணன், தனது மனைவி மோனிஷா இறந்துவிட்டதாகக் கூறி பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட்டு, தங்களது உறவினர்களை நம்பவைத்து, தனது உறவுக்கார பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கண்ணீர் அஞ்சலி புகைப்படத்தை பார்த்த முதல் மனைவி மோனிஷா கணவர் தன்னை ஏமாற்றி மற்றொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நெல்லை: மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற மோதலில் மாணவர் உயிரிழப்பு!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.