மதுரை: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, 'தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது போல், பொங்கலுக்கும் சிறப்புப்பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட உள்ளது.
17 ஆயிரம் சிறப்புப்பேருந்துகள் இயக்கவும், பயணிகளைப் பாதுகாப்பாக ஊர் கொண்டு சேர்க்கவும் மீண்டும் அவர்களது இடத்திற்கு வந்து சேர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அலுவலர்கள் தரப்பில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமமுமின்றி பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தவறு நடக்காமல் இருக்க அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை போல ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கரும்பு கொள்முதல் விவகாரத்தில் சசிகலா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லத் தயாராக இல்லை' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்