ETV Bharat / city

ஆசிரியர் தேர்வு வாரிய வினாத்தாள் தயாரிப்பில் விதிமுறைகள் மீறல்: மாணவர்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Aug 5, 2021, 10:55 PM IST

ஆசிரியர் தேர்வு வாரிய வினாத்தாள் தயாரிப்பில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதனால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது எனவும் ஆசிரியர் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரிய வினாத்தாள் தயாரிப்பில் விதிமுறைகள் மீறல்

மதுரை: வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவந்த நிலையில், அம்முறை ரத்து செய்யப்பட்டு சில ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பாக, தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு அறிவிக்கப்பட உள்ளதால், தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன.

ஆசிரியர் தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் அளித்த புகார்கள்:

இந்நிலையில் வினாத்தாள் தயாரிப்பில் விதிமுறைகள் மீறல் நடந்திருக்கிறது. இதனால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் 3 முதல் 5 லட்சம் வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

லட்சக்கணக்கானோர் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். எங்களது நம்பிக்கையாக டிஆர்பி தேர்வு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெறும் வினாத்தாள் தயாரிப்புப் பணிகளில், தனியாக பயிற்சி மையம் நடத்தும் ஆசிரியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது இல்லை.

இது விதிமுறையாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இந்த வினாத்தாள் தயாரிக்கும் பணியில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரது குடும்பத்திற்கு சொந்தமான தனியார் போட்டி தேர்வு மையம் மதுரையில் இயங்கிவருகிறது.

எனவே, வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பணிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறியதாக உள்ளது.

இது ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்களிடம் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வினாத்தாள் தயாரிக்கும் பணிகள்

இதுதொடர்பாக மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பொன். முத்துராமலிங்கத்திடம் கேட்டபோது, "இதுவரை வினாத்தாள் தயாரித்து சென்னையில் மட்டுமே நடைபெற்றுவந்த நிலையில், கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட மையங்களில் தற்போது வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன.

அந்தந்தப் பகுதிகளிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலரும் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட வேண்டும். எனவே மதுரையில் நடைபெற்ற பணிக்கு மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். வினாத்தாள் தயாரிப்புக் குழுவுக்குத் தேவையான ஏற்பாடுகள், உதவிகளுக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: '12ஆம் வகுப்பு துணைத் தேர்வு நாளை தொடக்கம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.