ETV Bharat / city

சாலையோரம் வசித்த பெண்ணின் குழந்தைகள் திருட்டு - விசாரணை தீவிரம் - child trafficking in madurai

மதுரை: சாலையோரம் வசித்துவந்த பெண்ணின் திருட்டுப்போன குழந்தைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

stolen children from homeless woman rescued

author img

By

Published : Jul 3, 2021, 11:21 PM IST

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் சாலையோரம் வசித்து வருபவர், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து ஆறு குழந்தைகளை பெற்றுள்ளார். முதல் குழந்தை பிரசவத்தின்போது உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளை இவரே வளர்த்து வந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு இரவோடு இரவாக இரண்டு குழந்தைகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2018ஆம் ஆண்டு சித்ராவுக்கு மேலும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்தக் குழந்தைகளையும், கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றையும் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சுகன்யா, கணேஷ்குமார் தம்பதியினர் தாங்கள் வளர்ப்பதாக கூறி பெற்றுக்கொண்டு, குழந்தைகளை செல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வி, சமயசஞ்சீவி தம்பதியினருக்கும், முத்துப்பட்டி வள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்த கலாநிதி, பாலச்சந்திரன் தம்பதியருக்கும் விற்பனை செய்தனர்.

அத்துடன் சரவணன் என்பவர் மூலமாக குழந்தைகளுக்கு போலியான ஆதார், பிறப்புச் சான்றிதழ்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் டாக்டர். சரவணன் அளித்த புகாரின்பேரில், இரட்டை பெண் குழந்தைகள், பச்சிளங்குழந்தை என மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து குழந்தை விற்பனையில் ஈடுபட்ட புகாரில் ஐந்து பேரை கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர், செல்வியின் கணவர் சமயசஞ்சீவி, சரவணன் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

இதனிடையே சித்ராவின் முதல் இரு குழந்தைகள் காணாமல்போனது குறித்து சுப்ரமணியபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.