மதுரை: கரோனா தடுப்பினை மையமாகக் கொண்டு மதுரை மாநகராட்சி சார்பாக கபசுரக் குடிநீர், ஆடாதோடா, ஹோமியோபதி, நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஆங்கில மருந்துகள் என இவை அனைத்தும் அடங்கிய மருந்து பெட்டகம் ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மருந்து பெட்டகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது ஆட்சி மாறிய நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அவரது தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசு சார்பில் வழங்கும் திட்டங்களில் தனது புகைப்படத்தை ஸ்டாலின் தவிர்த்து வந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் மருந்து பெட்டகத்தில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: 14 வகை மளிகை பொருள்: கருணாநிதி பிறந்தநாளில் மக்களுக்கு விநியோகம்