ETV Bharat / city

சோனியா புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறு பரப்புவதை தடுக்க உத்தரவு! - சோனியா புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறு பரப்புவதை தடுக்க நடவடிக்கை

சோனியா புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறு பரப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சோனியா காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தவறான அவதூறு

author img

By

Published : Mar 10, 2022, 11:06 PM IST

மதுரை: உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்தி சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தவறான அவதூறு கருத்துகள் பரப்பப்படுகின்றன.

அதனால் தவறாகப் பரப்பப்படும் இந்த தகவல்களை சமூக வலைதளத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிவு தபால் மூலம் புகார் செய்தேன்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மீது அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

எனவே உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறு தகவல்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் மற்றும் அவதூறான தகவல்களை பரப்பி வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காமெடியன் To முதலமைச்சர் - பகவந்த் சிங் மாண் பஞ்சாப் முதலமைச்சர் ஆன கதை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.