ETV Bharat / city

கேரளத்தில் வள்ளுவத்தைப் பரப்பிய சிவானந்தர் காலமானார் - சிவானந்தர் காலமானார்

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திருக்குறளையும், திருவள்ளுவரையும் பரப்புவதையே தொண்டாகக் கொண்டு வாழ்ந்த சிவானந்தர் உடல்நலக்குறைவால் காலமானார்.

சிவானந்தர்
சிவானந்தர்
author img

By

Published : Aug 10, 2021, 7:50 AM IST

Updated : Aug 10, 2021, 8:57 AM IST

மதுரை: திருவள்ளுவரைக் கடவுளாகவும், திருக்குறளைப் புனித வேதமாகவும் ஏற்று பின்பற்றும் மதம் ’திருவள்ளுவர் மதம்’ என அழைக்கப்படுகிறது. இதைப் பரப்புரைசெய்து உருவாக்கியவர் மூவாற்றுபுழாவைச் சேர்ந்த சிவானந்தர்.

சற்றேறக்குறைய 30 ஆயிரம் பேரை உறுப்பினராகக் கொண்ட ’பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடங்களை’ உருவாக்கிய சிவானந்தர், நேற்று (ஆகஸ்ட் 9) உடல்நலக் குறைவால் காலமானார்.

அமைதிப் புரட்சி

கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம் என்ற பெயரில் மடங்களை உருவாக்கியதால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளத்தில் நிகழ்ந்துவரும் அமைதிப்புரட்சியின் தலைவரே சிவானந்தர்.

சிவானந்தரின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்து திருக்குறளைப் பரப்பிவந்தவர் அவரது துணைவியார் சரஸ்வதி. அவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சிவானந்தரும் படுத்த படுக்கையாய் ஆனார். கேரள மாநிலம் கோதமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

உடல்நிலை மோசமடைந்ததால் எர்ணாகுளத்திலுள்ள மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 9 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருக்குறளைப் பரப்பிய சிவானந்தர்

இடுக்கி மாவட்டம், சேனாபதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஞானமடம் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிகச் சிறப்பாக கிளைவிட்டதுடன், மக்களை வள்ளுவ நெறியில் வாழ்ந்து காட்டவும் தூண்டியது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திங்கள் 10ஆம் நாளில் ஞான மடங்களின் ஆண்டு விழா பண்பாட்டு எழுச்சியுடன் நடைபெற்றுவருகிறது.

80 வயதான சிவானந்தர் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா அருகிலுள்ள பிரவம் கிராமத்தில் வசித்துவந்தார். கொச்சான், பொலியாள் தம்பதியருக்கு 12ஆவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு சுவாமணி என்ற மகளும் பீமானந்த சரஸ்வதி என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 1980-களில் மூணாறு அருகேயுள்ள சாந்தன்பாறையில் தமிழர் ஒருவர் நடத்திவந்த தேநீர் கடையில் கண்ட திருவள்ளுவரின் திருவுருவப்படத்தால் ஈர்க்கப்பட்டு, திருக்குறளை ஆழ்ந்து கற்று குறள் பரப்பும் தொண்டராகவே மாறி, ஆயிரக்கணக்கான மக்களை கடந்த 40 ஆண்டுகளாக வழிநடத்தியவர். திருக்குறள் காட்டும் நெறி மட்டும்தான் இந்த உலகம் மேம்பட வழி என்பதை செல்லுமிடமெல்லாம் உரத்துப் பேசியவர்.

மனைவியுடன் சிவானந்தர்
மனைவியுடன் சிவானந்தர்

நல்லடக்கம்

பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானமடங்களின் தமிழக நெறியாளர் தன்மானன் கூறுகையில், தற்போது சிவானந்தர் வாழ்ந்த எர்ணாகுளம் மாவட்டம் அஞ்சறைப்பட்டி அருகிலுள்ள வாரப்பட்டியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் அவரது வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் ஞானமடங்களின் மடாதிபதிகள், மடங்களின் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர்.

இதையும் படிங்க: ”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” - ஐபிசிசி ஷாக் ரிப்போர்ட்

Last Updated : Aug 10, 2021, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.