ETV Bharat / city

திமுகவின் அடக்குமுறைகளுக்கு அதிமுக அஞ்சாது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு - மதுரை

திமுகவின் அடக்குமுறைகளுக்கு அதிமுக அஞ்சாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திமுகவின் அடக்குமுறைகளுக்கு அதிமுக அஞ்சாது

author img

By

Published : Jul 24, 2021, 5:20 PM IST

மதுரை : பனகல் சாலையில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணியை அதிமுக தொடர்ந்து மேற்கொள்ளும். சட்ட திட்டங்களுக்கு உபட்டு காவல்துறை அனுமதியோடு அதிமுக பிரச்சாரம் நடைபெறும்".

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்

"திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. அனைத்து கடன்களும் ரத்து எனவும், பயிர்க்கடன் தேசிய வங்கி கடன் ரத்து என பொய்யாக அறிவித்து ஆட்சிக்கு வந்தனர். திமுகவால் எங்கள் அட்சியை ஒரு குறையும் சொல்லமுடியவில்லை. அதனால் நிறைவேற்ற முடியாத கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து 350 கோடியில் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளனர்".

திமுகவின் அடக்குமுறைகளுக்கு அதிமுக அஞ்சாது

மின்வெட்டுக்கு காரணம்

"கூட்டுறவு வங்கி கடன் ரத்து, மகளிருக்கு 1000 ரூபாய் நிதி, கல்விக்கடன் ரத்து, நீட்தேர்வு ரத்து என சொல்லிய திமுக ஆட்சியில் மின்சார வெட்டு உருவாகியுள்ளது. மேலும் புதிய கண்டுபிடிப்பாக அணில் தான் மின்வெட்டுக்கு காரணம் எனக்கூறி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர்".

ரேஷன் அரிசி கடத்தல்

"திமுக ஆட்சியில் டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் அரிசி கடத்தலுக்காக விஜிலென்ஸ் துறை உருவாக்கப்பட்டு ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்காக சாலைகளை சீரமைக்க சொன்ன உதவி ஆணையரை ஊக்குவிக்காமல் நீக்கியிருப்பது மன வருத்தத்தை தருகிறது" என்றார்.

அடக்குமுறை சந்திப்போம்

மேலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு குறித்த கேள்விக்கு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது பழிவாங்கும் நடவடிக்கையாக தெரிகிறது. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் சந்திக்கும். இதை ஒரு விஷயமாக பொருட்படுத்தவில்லை" என்றார்.

இதையும் படிங்க :சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.