ETV Bharat / city

அக்னிபத் திட்டம்: இளைஞர்களை ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக மாற்ற வாய்ப்பு - சீமான்

author img

By

Published : Jun 19, 2022, 9:39 AM IST

அக்னிபத் திட்டத்தின்கீழ் இணையும் வீரர்களை, ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக மாற்ற வாய்ப்புகள் அதிகம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
சீமான்

மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 18) செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொது பேசிய அவர், "பாஜக, காங்கிரஸ் நிலைப்பாட்டைத்தான் திமுகவும் எடுக்கிறது. பேரறிவாளனுக்கு வழங்கிய தீர்ப்பை மற்றவர்களுக்கு வழங்கலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால், மறுபடியும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

ஆட்சிக்கு வரும் முன் எழுவர் விடுதலை குறித்து பேசியவர்கள், ஆட்சிக்கு வந்த பின் தங்களது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்கள். இது நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்தது போன்றது. இவர்களின் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி நீதிமன்றம் வரை சென்று போராடும்" என்றார்.

மதுரையில் சீமான் பேட்டி

மேலும், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருவது குறித்து பேசிய சீமான், "கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இப்படித்தான் நடக்கும். கலவரம் நடக்கும் போது மத்திய அரசு அதை நிறுத்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அக்னிபத்தில் இணையும் வீரர்களை ஆர்எஸ்எஸ் ஆக மாற்றுவார்கள். ஏற்கனவே, ஆர்எஸ்எஸ்-இல் தடி மற்றும் சீருடை அணிவித்து பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

அதிமுக ஒற்றை தலைமை பிரச்னை குறித்த கேள்விக்கு, அது அவர்களின் உட்கட்சி பிரச்னை, அவர்கள் பேசி தீர்த்து கொள்வார்கள் என்று பதிலளித்தார். மேலும் அவர், "கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பாஜகவைச் சேர்ந்தவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவை அழைத்து திமுக நிகழ்ச்சி நடத்தியது. கருணாநிதி சிலை திறக்க வேறு ஆட்களே கிடையாதா? பாஜக ஆளும் மாநிலத்தில் கூட பிரதமரையோ, துணை குடியரசுத் தலைவரையோ அழைத்ததில்லை. அப்படியிருக்கும் சூழலில், ஆர்.எஸ்.எஸ்-ஐ குறை கூறுவது நியாயம் இல்லை. திமுகவே பாஜகவாக இயங்குகிறது, பிறகு எதற்காக குறை கூறுகிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அக்னிபத் திட்டம் பாஜக செய்த சதி' - நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.