அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நவம்பர் 9ஆம் தேதி வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி தீர்ப்பை நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கியதாகவும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கோரி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், மதுரை நெல்பேட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டம் நடத்திய பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'கனவு நனவானது' - அயோத்தி தீர்ப்பு குறித்து உ.பி முன்னாள் முதலமைச்சர் கருத்து