ETV Bharat / city

ரவிச்சந்திரன் விடுப்பு வழக்கு - அரசு தரப்பில் தகவல் பெற்று சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு! - court news tamil

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் உரிய தகவல் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

rajiv gandhi murder case accused
rajiv gandhi murder case accused
author img

By

Published : Aug 5, 2021, 5:32 PM IST

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார். இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்தின் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018 செப்டம்பர் 6ஆம் தேதியில் தீர்ப்பு வழங்கியது.

அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காகத் தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது.

இரண்டு மாத கால பரோல் தேவை

கரோனா தொற்று சிறைவாசிகளுக்கும் பரவிய நிலையில், எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்கக்கோரி மனு அனுப்பினேன். அதற்கு மத்திய அரசின் செயல் அதிகாரத்திற்குட்பட்ட சட்டப்பிரிவின்கீழ், எனது மகன் தண்டனை பெற்றுள்ளதால், அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு, அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், இதனைக் காரணம்காட்டி, ஏற்கெனவே தமிழ்நாடு அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. ஆகவே, இவற்றை கருத்திற்கொண்டு 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கும் இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷா பானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசுத்தரப்பில் உரிய தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி வழங்கிய சிறைக்கைதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.