ETV Bharat / city

மாஸ்டர் பிளானை வெப்சைட்டில் வெளியிட அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - மாஸ்டர் பிளானை வெப்சைட்டில் வெளியிடுவது

மதுரை: மாஸ்டர் பிளானை வெப்சைட்டில் வெளியிடுவது அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Jan 19, 2021, 11:51 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், சூரங்கோட்டையைச் சேர்ந்த வக்கீல் மருதுபாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சாலை பயன்பாட்டிற்கான நிலத்தை பலர் வணிக ரீதியான கட்டிடங்களுக்கான பகுதி எனக்கூறி நில விற்பனை நடந்துள்ளது. இதுபோன்ற விபரங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. இதனால், பொதுமக்கள் நிலங்களை வாங்குவதில் ஏமாற்றப்படும் நிலை உள்ளது.

மாஸ்டர் பிளான் விபரம் தெரியாத நிலையில் பலரும் சுலபமாக நிலங்களை வகை மாற்றம் செய்து விற்கும் நிலையே உள்ளது. வழக்கமாக மாஸ்டர் பிளான் 10 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது. இதை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக செய்வதில்லை. எனவே, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் தமிழகத்திலுள்ள நகரங்களில் புதிய மாற்றியமைக்கப்பட்ட மாஸ்டர் பிளானை உடனடியாக நகர் மற்றும் ஊரமைப்பு திட்டம் மற்றும் அரசின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுதாரர் நல்லதொரு யோசனையை கூறியுள்ளார். மாஸ்டர் பிளானை வெப்சைட்டில் வெளியிடுவதன் மூலம் குடியிருப்பு பகுதி, வணிகப் பகுதியான என தெரிந்து கொண்டால் அதிகளவிலான மனுக்கள் வராது. நிலத்தை மாற்றம் செய்யக் கோருவது குறையும். குறிப்பாக லஞ்சம் வாங்குவது போன்ற செயல்கள் தவிர்க்கப்படும்.

தேவையில்லாமல் அரசு அதிகாரிகளிடம் செல்ல வேண்டியதில்லை. வெப்சைட்டில் வெளியிடுவதன் மூலம் தேவையற்ற பிரச்னைகள் எழாமல் முன்கூட்டியே தீர்க்க முடியும். ஒரு நிலத்தை பதிவு செய்யும் போதே அது எந்த வகையான நிலம் என்பதை குறிப்பிட முடியும். எனவே, அனைத்து பகுதிகளுக்கான மாஸ்டர் பிளானையும் வெப்சைட்டில் வெளியிடுவது தொடர்பாக அரசுத் தரப்பில் ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.