மதுரை: அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் மற்றும் சங்கர் ஆகியோர், கடந்த06.11.2017 அன்று திருச்சி 3 வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அடங்கிய குழு, தங்களுக்கு வழங்கிய கொலை வழக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,
கடுமையான கொலை குற்றங்களை, தற்போது போலீசார் கையாளும் விசாரணை குறித்து இந்த நீதிமன்றம் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தது.
கொலை குற்றங்களை சட்டம் ஒழங்கு போலீசாரே விசாரிப்பதால், வேலை பளுவால் விசாரணையை சட்டம் ஒழுங்கு போலீசாரல் தீவிரமாக நடத்த இயலவில்லை. கொலை, குற்றங்களை விசாரிப்பதற்கு காவல் துறையில் புதிதாக தனி பிரிவை உருவாக்க வேண்டும். தனியான விசாரணைப் பிரிவை உருவாக்குவதே, சட்டம்-ஒழுங்கு போலீஸாரின் விசாரணையில் சுமையை ஏற்படுத்தாமல் இருக்கும்.
எனவே, கொலை, குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு காவல் துறையில் தனி பிரிவை உருவாக்க அரசு தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. முதல் கட்டமாக கொலை , வழக்குகளின் விசாரணையை மட்டுமே கையாளும் காவல் துறையில் தனிப்பிரிவை உருவாக்குவது அரசின் கடமையாகும் என நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து DIG பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்; வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை...