ETV Bharat / city

காவல்துறையிடம் வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! - Youngsters arrest

மதுரை: நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் தனியாக செல்பவர்களிடம் நூதன முறையில் பேசி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Police arrested the cell phone thieves
Police arrested the cell phone thieves
author img

By

Published : Sep 16, 2020, 2:01 PM IST

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள கிழக்குகுயில்குடி பகுதியில் உள்ள கருப்புசாமி கோயிலுக்கு சாமிகும்பிட வரும் நபர்களை குறிவைத்து அவர்களிடம் நைசாக பேசி அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும் செல்போனை தாருங்கள் என தனியாக வருபவர்களிடம் செல்போனை வாங்கி ஒட்டம் பிடித்து திருடி செல்வதாக நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினருக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் காவல்துறையினர் இன்று(செப் 16) அப்பகுதியில் மாறுவேடத்தில் மறைந்து நின்று செல்போன் திருடர்களை பொறி வைத்து பிடிக்க எண்ணினார்கள்.

அதன்படி, அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தபோது அப்போது அவ்வழியே கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞரிடம் செல்போன் திருடர்கள் வழக்கம் போல் அவசரம் என செல்போனை வாங்கி விட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது காவலர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டனர்.

பின்னர் விசாரணையில், செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்து பாண்டி (23), வேல்முருகன் (21) என தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஐந்து செல்போன்களை மீட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.