ETV Bharat / state

பணம் கேட்டு மிரட்டிய பாமக நிர்வாகியை தாக்கிய மதுபான கூட ஊழியர்கள்! - பாமக நிர்வாகியை தாக்கிய மதுபான கூட ஊழியர்கள்

கோவை: மதுபானக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய பாமக நிர்வாகியை அங்கிருந்த மதுபானகடை ஊழியர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

மதுரை
மதுரை
author img

By

Published : Aug 24, 2020, 6:29 PM IST

Updated : Aug 25, 2020, 3:34 PM IST

கோவையில் பாமக மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, நேற்று நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றுக்கு சென்று பத்தாயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மதுபான கடை ஊழியர்கள், அவரது செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு அவரை தாக்கியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கு விளக்கமளித்த ஸ்ரீநிதி, "துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறந்து இருந்ததால், துடியலூர் காவல் நிலையத்தில் சென்று தகவல் தெரிவித்துவிட்டு, அதனை நிரூபிக்க டாஸ்மாக் கடை திறந்து இருப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தேன்.

இதுவரை பல்வேறு மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து அதற்கு தீர்வு கண்டு வந்துள்ளேன். நொய்யலில் மணல் கொள்ளையை தடுத்தேன். இதற்கு என் மீது போலி வழக்குகள் போடப்பட்டது. அதேபோல் கோவையில் தடாகத்தில் மண் கொள்ளையையும் தடுத்து, அதற்கு போலி வழக்கு போடப்பட்டு 15 நாள்கள் சிறை சென்றேன்.

ஞாயிறுக்கிழமை முழு உரடங்கில் சட்டவிரோதமாக டாஸ்மாக் கடை திறந்திருந்தனர். மாலை நேரம் நடை பயிற்சிக்கு சென்ற போது, கடை திறந்ததை பார்த்து அதிர்ந்தேன். அதை என் மொபையில் போனில் புகைப்படம் எடுத்து காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினேன். இதை டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களின் முதலாளிக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் என் நண்பர்கள் மூலமாக என்னை தொடர்பு கொண்டார். 'சட்டவிரோதமாக டாஸ்மாக் கடை திறந்து இருப்பது அனைவருக்கும் தெரியும், அனைவருக்கும் பணம் செல்கிறது என்று கூறினார்.

நாங்கள் எந்த வித பணமும் இது நாள்வரை வாங்கியது இல்லை என்று ஆணித்தரமாக கூறினேன். மது வாங்கிக்கொள்ள சொல்லி வற்புறுத்தினார். நான் மது அருந்தும் பழக்கம் உடையவன் இல்லை என்றும் கூறினேன்.

காவல் நிலையத்திற்கு வர சொல்லிவிட்டு நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதைத்தொடர்ந்து காவலர் ஒருவர் மதுபான கடைக்கு சென்றுள்ளார். இதை அறிந்து, நான் மதுபான கடைக்குச் சென்றேன். அங்கிருந்த காவலர் திறந்து இருந்த கடை முன்பே நின்று கொண்டு கடை திறக்கவில்லை என்றார்.

அப்போது நான் வீடியோ எடுக்கவா என்று சொல்லிக் கொண்டு, வீடியோ எடுக்க முயன்றபோது காவலர் உதவியுடன் எனது மொபைல்போனை பறித்துக் கொண்டனர். இப்போது எடிட் செய்த ஆடியோவை வைத்து என் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். என் பெயரை களங்கப்படுத்த இதுபோல செய்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

வைரலான வீடியோ

இதையும் படிங்க: மதுபானக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

Last Updated : Aug 25, 2020, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.