ETV Bharat / city

மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது! - மருந்தக உரிமையாளர் கைது

மதுரையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதை உணர்வளிக்கும் மாத்திரைகளைப் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை
மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை
author img

By

Published : Aug 5, 2022, 7:08 PM IST

Updated : Aug 5, 2022, 7:18 PM IST

மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல மருந்தகமான 'மதுரா மெடிக்கல் சென்டர்' அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை கடிதங்கள் இல்லாமலேயே அல்பிரசோலம் (Alprazolam) எனப்படும் நரம்பியல் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் போதை உணர்வுக்கு அடிமையாவதாகவும் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையில் காவல் துறையினர் மற்றும் மருந்து ஆய்வாளர் குழுவினர் கடையில் அதிரடி சோதனை நடத்தி கடையில் இருந்த குறிப்பிட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தொடர்ந்து மருந்து விற்பனை செய்வதற்குத் தடை விதித்த காவல் துறையினர், கடையை சீல் வைக்கவும் உத்தரவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் மருந்தாளுனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்குச்சீல் வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிகாரில் கள்ளச்சராயம் குடித்தவர்கள் உயிரிழப்பு - பலருக்கு கண் பாதிப்பு!

Last Updated : Aug 5, 2022, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.