ETV Bharat / city

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக்கவசத்தை தங்களது தரப்புக்கு வழங்க ஈபிஎஸ் தரப்பு வழக்கு - ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு போட்டி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறும் அதிகாரத்தை தங்கள் தரப்புக்கு வழங்க கோரி திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 19, 2022, 7:55 AM IST

மதுரை: இதுகுறித்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "விடுதலைப்போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு 2014ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்க கவசம் வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் அக்.30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாளை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பாக தங்க கவசத்தினை வங்கியில் இருந்து பெற்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவித்து மரியாதை செய்தப் பின், மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.

இதற்காக அதிமுக பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்று செல்வார்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்க கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில், தற்போது ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, இவரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, அதிமுக பொருளாளராக உள்ள எனக்கே தங்க கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால், வங்கி அதிகாரிகள் தங்களிடம் தங்க கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே, 2022 அக்.30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாளையொட்டி, தங்க கவசத்தினை எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அதிமுக சார்பாக உபயோகப்படுத்தும் அதிகாரத்தை வழங்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவச விவகாரம் - தேவர் நினைவாலய பொறுப்பாளர் பரபரப்பு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.