மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட, வைகை ஆற்றுப்படுகையில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி காவல் துறையிருக்கு புகார்கள் சென்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மதுரை துவரிமான் பகுதியை சார்ந்த, முத்தையா கோயில் எதிரே உள்ள வைகை ஆற்றுப்படுகையில், மாட்டு வண்டி மூலம் அனுமதியின்றி பாண்டி என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டதை இன்று கண்டறிந்த காவல் துறையினர், அவரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர், அவரது மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ‘பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேருங்கள்’ - விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்