மதுரை ஊமச்சிகுளத்தில் பொன்னுத்தாய் என்கிற 60 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்துவந்தார். இன்று (ஜன. 05) பிற்பகல் 2 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவர் அரிவாளால் அம்மூதாட்டியை வெட்டியுள்ளார்.
இதைத் தடுக்கவந்த பஞ்சு என்கிற பக்கத்து வீட்டுப் பெண்ணின் தலைமுடியையும் முத்துச்செல்வம் அறுத்து வீசி உள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே பொன்னுத்தாய் உயிரிழந்தார். வெட்டுக் காயங்களுடன் பஞ்சு சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொன்னுத்தாய்க்கும் முத்துச்செல்வத்துக்கும் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட சண்டை காரணமாக இக்கொலை நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட அரிவாள், முத்துச்செல்வத்தின் செல்போன் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஹரியானாவில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்: லட்சக்கணக்கில் உயிரிழந்த கோழிகள்