ETV Bharat / city

’மதுரை தொழிலதிபர் கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி’ - நித்யானந்தா உத்தரவு! - kailash new country passport

மதுரையைச் சேர்ந்த பிரபல ஹோட்டல் உரிமையாளருக்கு கைலாசா நாட்டில் கிளையை திறக்க நித்யானந்தா அனுமதி அளித்துள்ளார்.

மதுரை தனியார் ஓட்டலுக்கு கைலாசாவில் அனுமதி

author img

By

Published : Aug 23, 2020, 2:30 PM IST

நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து தினந்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொருளாதார மேம்பாட்டு அறிவிப்பு என கைலாசா நாட்டிற்கான நாணயங்கள், பணத்தை விநாயகர் சதுர்த்தியான நேற்று (ஆக.22) வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து இந்து நாடுகளோடு பொருளாதார ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், மதுரையில் உள்ள டெம்பிள்சிட்டி ஓட்டல் உரிமையாளர் குமார் என்பவர், கைலாசா நாட்டில் ஹோட்டல் திறக்க அனுமதி கோரி, நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

நித்யானந்தா

அத்துடன் அந்தக் கடிதத்தில் உலகின் சிறந்த உணவை உங்கள் நாட்டில் அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்திற்கு காணொலி வாயிலாக பதிலளித்துள்ள நித்தியானந்தா, ”உங்களுடைய கடித்ததை நான் பார்த்தேன், அதற்கு நன்றி.

உங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி என்னுடைய சன்னியாசிகளுக்கு உத்தரவிடுகிறேன். எப்போது நான் கைலாசாவை அதிகாரப்பூர்மாக திறக்கிறேனோ, அப்போது உங்களுக்கு ஹோட்டல் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்" எனப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கைலாசா நாட்டில் ஹோட்டல் தொடங்க மதுரை தொழிலதிபர் நித்யானந்தாவுக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.