ETV Bharat / city

எங்களை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் பிரச்னை - சீமான்

author img

By

Published : Aug 9, 2019, 8:31 PM IST

மதுரை: நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்களின் பிரச்னை என்றும், தொடர்ந்து களத்தில் நிற்பதுதான் எங்களது கொள்கை முடிவு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

seeman

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் மக்களின் பிரச்னை தொடர்ந்து களத்தில் நிற்பதுதான் எங்களது கொள்கை முடிவு. அதனால்தான் அனைத்து தேர்தலிலும் போட்டியிடுகிறோம். இதில் திமுக, அதிமுக என்பது தேர்தலை எந்தளவிற்கு நேர்மையாகச் சந்திக்கிறது என்பதைத்தான் நீங்கள் பார்க்கவேண்டும். சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஒரு தொகுதிக்கு எவ்வளவு வாக்குகள் வாங்கினோம், அதனைவிட அதிகமாக தற்போது வாங்கிவிட்டோமா, அப்படி என்றால் முன்னேறுகிறோம், வளர்கிறோம், அதனையே நாங்கள் பார்க்கிறோம்.

காஷ்மீரை ஒன்றிய பிரதேசமாக அறிவித்ததில், எங்களுக்கு உடன்பாடில்லை. சிறப்பு அந்தஸ்தைக் கொடுத்தது யார்? முதலில் அப்படி என்றால் அது காஷ்மீரில் மட்டும்தான் உள்ளதா? இன்று மிசோரத்தில் உள்ளது. கோவா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 371 உள்ளது. காஷ்மீரில் இருக்கும் சிறப்பு அந்தஸ்து இருப்பதுபோல, ஹிந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்.

ஒரு மாநிலத்திற்கு எதற்குச் சிறப்பு அந்தஸ்து என்று கேட்கும் நீங்கள் ஒரு மொழிக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் அதனைத் திருப்பி எடுங்கள். கோயில்களில் பிராமணர்கள் மட்டும்தான் பூஜை செய்ய வேண்டும் என்று கூறும் சிறப்பு அந்தஸ்தை எடுங்கள் எல்லோரும் செய்யலாம் என்று கூறுங்கள். அதுதான் சரியாக இருக்கும்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

தமிழ்நாட்டில் ஒரு கோடி வட இந்தியர்கள் குடியேறியுள்ளார்கள். இந்த ஆண்டு அது போல ஜம்மு-காஷ்மீரில் பலபேரைக் குடியேற்றுவார்கள். அங்கும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருந்தவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு. ஆனால் அங்கு யாருக்குக் கிடைக்கும். அங்குள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்குமா? இஸ்லாமியர்களுக்குக் கிடைக்கப்போகிறதா? அப்போது இவர்கள் குடியேற்றுபவர்களுக்குத்தான் கிடைக்கும்.

சென்னையை ஒரு ஒன்றிய பிரதேசமாக மாற்றி வட மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் என இரண்டாகப் பிரித்து கூறுபோட்டு தமிழக ஒற்றுமையை எதிர்த்து ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து போராடுபவர்களைப் பிரித்துப்போட்டால், எளிதாக அவர்கள் உள்ளே நுழையலாம் என திட்டமிடுகிறார்கள்” என்றார்.

Intro:மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

திமுக அதிமுக இடையேயான வித்தியாசமே நாம் தமிழர் கட்சியின் வாக்காக உள்ளது என்ற கேள்விக்கு_

நாம் தமிழர் கட்சியை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மக்களின் பிரச்சினை தொடர்ந்து களத்தில் நிற்பது தான் எங்களது கொள்கை முடிவு.
அதனால் தான் அனைத்து தேர்தலிலும் போட்டியிடுகிறோம்.
Body:மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

திமுக அதிமுக இடையேயான வித்தியாசமே நாம் தமிழர் கட்சியின் வாக்காக உள்ளது என்ற கேள்விக்கு_

நாம் தமிழர் கட்சியை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மக்களின் பிரச்சினை தொடர்ந்து களத்தில் நிற்பது தான் எங்களது கொள்கை முடிவு.
அதனால் தான் அனைத்து தேர்தலிலும் போட்டியிடுகிறோம்.

இதில் திமுக அதிமுக என்பது தேர்தலை எந்த அளவிற்கு நேர்மையாக சந்திக்கிறது என்பது தான் நீங்கள் பார்க்க வேண்டும்.

பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறது பெரும் பணத்தை முதலீடு செய்கிறது அதனால் அதிகமாக பணம் கொடுப்பது ஆளுங்கட்சி குறைவாக பணம் கொடுப்பது எதிர்க்கட்சி என்கின்ற நிலை தான் நீண்ட காலமாக இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அப்படி இல்லாமல் போட்டிப் போட்டால் மக்கள் எங்களுக்கு வாக்கு தரும் சூழ்நிலைதான் உருவாகும். அதனால் அதனை யோசிக்க இயலாது.

போன சட்டசபை தேர்தலில் 2016 இல் ஒரு தொகுதிக்கு எவ்வளவு வாங்கினோம் அதனை விட அதிகமாக வாங்கி விட்டோமா அப்படி என்றால் முன்னேறு கிறோம் வளர்கிறோம் அதனை தான் நாங்கள் பார்க்கிறோம்.

_காஷ்மீர் பிரிக்கப்பட்டது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரையும் மன்னிப்பதாக பிரதமர் கூறியது குறித்த கேள்விக்கு_

எதற்காக அவர் மன்னிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் எங்களுக்கும் ஒரு கருத்து உள்ளது அது தேவையற்றது.

அதனை யூனியன் பிரதேசமாக அறிவித்து அதில் எங்களுக்கு உடன்பாடில்லை சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற வேண்டும் என்கிறார்கள் அதனை கொடுத்தது யாரு? முதலில் அப்படி என்றால் அது காஷ்மீரில் மட்டும்தான் உள்ளதா? இன்று மிசோரத்தில் உள்ளது கோவா கர்நாடகா ஆந்திரா மகாராஷ்டிரா குஜராத் அது 370 இங்கு 371 உள்ளது காஷ்மீரில் இருக்கும் சிறப்பு அந்தஸ்து இருப்பதுபோல ஹிந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்.

ஒரு மாநிலத்திற்கு எதற்கு சிறப்பு அந்தஸ்து என்று கேட்கும் நீங்கள் ஒரு மொழிக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் அதனை திருப்பி எடுங்கள் கோயில்களில் பிராமணர்கள் மட்டும்தான்வழிபட வேண்டும் என்று கூறும் சிறப்பு அந்தஸ்தை எடுங்கள் எல்லோரும் வணங்கலாம் என்று கூறுங்கள். அது தான் சரியாக இருக்கும்.

இங்கு ஏன் இவ்வளவு அக்கறையாக செய்கிறார் என்றால் RSS பிஜேபி என்ன செய்யும் என்று நமக்குத் தெரியாதா?

இந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி இரண்டாக பிரித்து அதில் யூனியன் பிரதேசமாக மாற்றியதில் எவ்வளவு சிறப்பு பெறப் போகிறது என்று பார்க்கத்தான் போகிறீர்கள்.

ஐந்தாண்டு கழித்து கீழே இறங்கும் பொழுது இப்பொழுதே முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கப் போகிறது - நேற்று என்ன கூறினார் தமிழ் படங்கள் இந்தி படங்கள் தெலுங்கு படங்கள் எடுப்பவர்கள் காஷ்மீர் வாருங்கள் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் ஒரு கோடி வட இந்தியர்களை குடியேறியுள்ளார்கள் இந்த ஆண்டு அது போல ஜம்மு-காஷ்மீரில் பலபேரை குடியேற்றுவார்கள் அங்கும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆனால் அங்கு யாருக்கு கிடைக்கும்.

அங்குள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்குமா? இஸ்லாமியர்களுக்கு கிடைக்கப் போகிறதா? அப்போது இவர்கள் குடியேற்றுவார்களுக்குத்தான் கிடைக்கும்.

பெரும் முதலீட்டாளர்களை கொண்டு போய் பெரிய நிறுவனங்களை நிறுவி விடுதிகளை கட்டி கேளிக்கைகளமாக மாற்றி விடுவார்கள் அதான் நடைபெறும் பெரும் முதலைகளின் வேட்டைக் காடாக மாற்றுவார்கள் இவ்வளவு நாளா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது இனி தகர்க்கப்படும்.

சென்னை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றி வட மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் என இரண்டாகப் பிரித்து கூறுபோட்டு தமிழக ஒற்றுமையை எதிர்த்து ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து போராடுபவர்களை பிரித்துப்போட்டாள் எளிதாக அவர்கள் உள்ளே செல்லலாம் என திட்டமிடுகிறார்கள். அதான் நடைபெறும்

வைகோ காங்கிரசை எதிர்த்து பேசியது பற்றிய கேள்விக்குதெரியலையே அவர்கள் ஏதோ ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள் அவர்கள் குடி தான் பேசிக் கொள்ள வேண்டும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.