ETV Bharat / city

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - திருப்பரங்குன்றம் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை: அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.

murugan_Temple  hoisting of the flag
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
author img

By

Published : Dec 3, 2019, 8:03 AM IST

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்று 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் முருகன், தெய்வானை, பால், பன்னீர், பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். பின் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் முன்னிலையில் விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

கோவில் குருக்ககள் ராஜா, ரமேஷ், செல்லப்பா, சிவானந்தம், சுப்பிரமணி உள்ளிட்டோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 9ஆம் தேதி மாலை 7 மணி அளவில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து கார்த்திகை தீபம் டிசம்பர் 10ஆம் தேதி காலையில் முருகன் தெய்வானை எழுந்தருள தேரோட்டம் நடைபெறும், மாலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்படும்.

திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது
இதற்காக நேற்று திருப்பரங்குன்றம் கோவில் அலுவலகத்தில் 3 அடி உயரம் தாமிர கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மலைமீது மகா தீபம் ஏற்ற கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:

திருக்கார்த்திகைக்குத் தயாராகும் திருவண்ணாமலை கோயில் வாகனங்கள்!

Intro:*ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது*Body:*ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது*

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா அதற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலைமேல் மகாதீபம் டிசம்பர் 10 ஆம் தேதி ஏற்றப்படுகிறது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்று 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கான கொடியேற்றம் இன்று பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு முருகன் தெய்வானையுடன் தினமும் அன்ன வாகனம், தங்க மயில் வாகனம், தங்கக் குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். பின் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் முன்னிலையில் விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

கோவில் பட்டர்கள் ராஜா, ரமேஷ், செல்லப்பா, சிவானந்தம், சுப்பிரமணி உள்ளிட்டோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 9ஆம் தேதி மாலை 7 மணி அளவில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து கார்த்திகை தீபம் டிசம்பர் 10ஆம் தேதி காலையில் முருகன் தெய்வானை எழுந்தருள தேரோட்டம் நடைபெறும், மாலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்படும்.

இதற்காக நேற்று திருப்பரங்குன்றம் கோவில் அலுவலகத்தில் 3 அடி உயரம் உள்ள தாமிர கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து மலைமீது மகா தீபம் ஏற்ற கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.