மதுரை: கல்மேடு அருகே உள்ள எம்ஜிஆர் காலனி பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது மகன், மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.
மூத்தமகள் ஜோதிகாவுக்கு நேற்று(ஜன.08) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தில் லட்சுமி(45) மகள் ஜோதிகா(23) அவரது 3 வயது மகன் ரித்தீஷ் மற்றும் லட்சுமியின் மகன் சிபிராஜ்(13) ஆகிய நான்கு பேரும் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதில் ஜோதிகா மற்றும் ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து சிலைமான் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உணவில் அபாயம் - கையெழுத்து பரப்புரையைத் தொடங்கிய கார்த்தி