ETV Bharat / city

'விரைவில் மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு பணிகள்' - அமைச்சர் சேகர் பாபு

மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும் கோயில்களில் உள்ள ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு
author img

By

Published : Jun 18, 2021, 11:57 AM IST

Updated : Jun 18, 2021, 12:38 PM IST

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் யானை பார்வதி கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மதுரை சென்றிருந்தார். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

கோயில் யானைகளை காப்பது அரசின் கடமை:

"கோயில் யானை பார்வதி கடந்த சில ஆண்டுகளாக கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததை அறிந்து அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்று பார்வதி யானையை காப்பாற்றுவோம்.

'கோயில் யானைகளை காப்பது அரசின் கடமை' - அமைச்சர் சேகர்பாபு

அதேபோல் திருக்கோயில்களில் தற்போது 30 யானைகள் உள்ளன. அவை அனைத்தையும் முறையாக பராமரித்து பாதுகாப்பது அறநிலையத் துறையின் கடமை ஆகும். அதனை தமிழ்நாடு அரசு சிறப்புடன் செய்யும்.

விரைவில் மீனாட்சி கோயில் குடமுழுக்கு:

கடந்த 2019ஆம் ஆண்டு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீர வசந்த ராயர் மண்டபம் சீரமைக்கும் பணிகள் கரோனா தொற்றுக்குப் பிறகு தொடங்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகள் நிறைவு பெறும். அதற்குப் பிறகு மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு பணிகள் தொடங்கும்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி
அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "மலைக்கோயில்களில் முதியோர்களும் சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2010ஆம் ஆண்டு ரோப் கார் வசதி ஏற்படுத்தி கொடுத்தார். பிறகு வந்த ஆட்சியாளர்கள் சில கோயில்களில் பணிகளை முழுமைப்படுத்தாமலேயே விட்டுவிட்டனர். ஆகையால் அவற்றை எல்லாம் சரி செய்து ரோப்கார் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

'ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது'

அனைத்து அறநிலைத்துறை கோயில்களிலும் சித்த மருத்துவமனை உருவாக்கப்படும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோயில் சொத்துக்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக மீட்டு அதன் வருமானம் வேறு எங்கேனும் மடைமாற்றப்பட்டு இருந்தால் அவற்றையும் கண்டறிந்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது உறுதி" என்று கூறினார்.

யானையின் ஆசி பெற்ற அமைச்சர்
யானையிடம் ஆசி பெற்ற அமைச்சர்

மேலும், "கோயில்களில் உள்ள நகை உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் குறித்து பொதுவெளியில் தகவல் தெரிவிப்பது அதன் பாதுகாப்பு தன்மைக்கு உகந்ததல்ல. அதன் காரணமாகவே அறநிலைத்துறை இதுவரை அவற்றை வெளியிடவில்லை.

கோயில் திறப்பு எப்போது?

ஆனால் அவற்றை பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பு அறைகளை 108 இடங்களில் தமிழ்நாடு அரசு கட்ட உள்ளது. அந்த அறையின் மாதிரி வடிவத்தை முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற உடன் அவற்றை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் கோயில் திறப்பு எப்போது? - அமைச்சர் விளக்கம்
கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்து வருகிறது. இனி ஒரு உயிர் இழப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் திருக்கோயில்கள் அனைத்தும் பக்தர்களுக்காக திறந்துவிடப்படும்" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் விரைவில்' - அமைச்சர் சேகர்பாபு

Last Updated : Jun 18, 2021, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.