மதுரை மாவட்டம், ஆண்டாள்புரம் பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர், இளைஞர் கிருஷ்ணமூர்த்தி. இவர், இன்று (அக்.04) அவரது வீட்டின் மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
![இளைஞர் தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13260897_mdu.png)
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுப்பிரமணியபுரம் காவல் துறையினர், கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13260897_ds.jpg)
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி எம்.இ., பட்டதாரி எனவும் உரிய வேலை வாய்ப்பு இல்லாததால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!