இது குறித்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்னை 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கைப்பற்றும்.
பணக்காரர்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே செயல்படுகின்ற பாஜக ஆட்சியை மக்கள் கண்டிப்பாக புறக்கணிப்பார்கள் என்று நம்புகிறோம். தொகுதி பக்கம் செல்லாத தற்போதைய அதிமுக எம்.பி. குறித்து சொல்ல ஒன்றும் இல்லை” என்றார்.