ETV Bharat / city

‘குடும்பம் குட்டிங்க இருக்காங்க... பாத்து சூதானமா போங்க...’- மதுரை மக்களை கவர்ந்த உதவி ஆய்வாளர் - Madurai Traffic Police

போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, அனைவரிடமும் பாராட்டைபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் குறித்த சிறப்பு தொகுப்பு...

உதவி ஆய்வாளர் பழனியாண்டி
உதவி ஆய்வாளர் பழனியாண்டி
author img

By

Published : Aug 20, 2021, 5:02 PM IST

Updated : Aug 20, 2021, 6:07 PM IST

மதுரை: ‘எல்லாரும் நல்லாருக்கணும், குடும்பம் குட்டிகளோட நல்ல வாழணும், அதனால ரோட்டுல போகும்போது கவனமா போகணும், தலைக்கவசம் கண்டிப்பா அணிஞ்சுக்கங்க, இதெல்லாம் உங்க நல்லதுக்குத்தான் நாங்க சொல்றோம்’ இதுபோன்ற வாஞ்சை மிகுந்த குரலை மதுரைக்காரர்கள் மதுரையின் பல்வேறு சந்திப்புகளில் கேட்காமல் கடந்திருக்கவே முடியாது. அந்த குரலுக்கு சொந்தகாரர்தான் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனியாண்டி.

மதுரையிலிருந்து 15 கி.மீ., தொலைவிலுள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவர், காவல் துறையில் பணிக்குச் சேர்ந்து 29 ஆண்டுகளாகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை நகர் போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.

விருது பெரும் பழனியாண்டி
விருது பெரும் பழனியாண்டி

உதவும் மனப்பான்மை கொண்ட உதவி ஆய்வாளர் குடும்பம்

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் அபிநயா, இந்திய ஆட்சிப் பணிக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இளைய மகள் அஸ்வதா, தற்போது பன்னிரெண்டாம் வகுப்பில் 95 விழுக்காடு மதிப்பெண் பெற்று சட்டம் பயில ஆர்வம் கொண்டுள்ளார்.

உதவி ஆய்வாளர் பழனியாண்டி
உதவி ஆய்வாளர் பழனியாண்டி

பழனியாண்டியின் மனைவி கீதா மெழுகுவர்த்தி தொழில் மூலம் 10 பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறார். தங்களிடம் பணி செய்பவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை பெருமையுடன் பகிர்கிறார் பழனியாண்டி.

பொதுமக்களை கவரும் காவலர்

மதுரை மாநகரின் பல்வேறு சந்திப்புகளில் பழனியாண்டியின் குரலைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. 'குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும், ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சி போனாத்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும், எல்லாரும் சந்தோஷமா ஆனந்தமா இருக்கணும், எதுக்காகவும் கவலைப்படக்கூடாது' என போக்குவரத்து விழிப்புணர்வுடன் வாழ்வியல் அனுபவங்களையும் ஒலிபெருக்கியில் உரத்துப் பேசுகிறார்.

உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

இது குறித்து நம்மிடம் பேசிய பழனியாண்டி, 'என்னோட வீட்டுல ஒரு லட்சம் ரூபாய் மதிப்புல புத்தகங்கள் வச்சிருக்கேன். வேல முடிஞ்சு வீட்டுக்குப் போனா வாசிப்பு... வாசிப்பு... வாசிப்புதான். அதுல நான் கத்துக்கற நல்ல விசயங்கள பொதுமக்கள்கிட்ட பகிர்ந்துக்கிறேன்.

அறிவுரை வழங்கிய காவலர்

இந்த வேலைய ரொம்ப ரசிச்சு நான் செய்யுறேன். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் ஒருநாள் நான் வேலை செய்யுற இடத்துக்கே வந்து எனக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செஞ்சாரு. அத பெருமையா கருதுறேன்' என்றார்.

பாராட்டை பெற்ற உதவி ஆய்வாளர்
பாராட்டை பெற்ற உதவி ஆய்வாளர்

நம்முடன் பேசிக் கொண்டிருக்கும்போதே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துகிறார். மக்களை அறிவுறுத்தி, வாழ்வியல் பாடங்களை எடுக்கத் தொடங்குகிறார்.

நம்பிக்கையூட்டும் உதவி ஆய்வாளர் பழனியாண்டி

காவலருக்குள்ளும் கனிவும், கண்ணியமும் நம்மை வியக்க வைக்கின்றன. ஒலிபெருக்கியில் என்ன சொல்கிறாரோ, அதையே நமக்கும் அறிவுரையாய் சொல்லி வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று நமக்கும் விடை கொடுத்தார் பழனியாண்டி.

இதையும் படிங்க: கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் - துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டருக்கு விருது

Last Updated : Aug 20, 2021, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.