மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில், ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும்.
ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி, திருவிழா ஆக. 8ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவின் 6ஆம் நாளில், மீனாட்சி அம்மன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருள்வது விசேஷமான ஒன்று.
இதனையொட்டி, மீனாட்சி அம்மனுக்கு நேற்று (ஆக. 4) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி பனிமயமாதா அன்னை சப்பர பவனி