ETV Bharat / city

தனுஷின் கர்ணன் படத்திற்கு தடைக்கோரி வழக்கு! - கர்ணன் திரைபடம்

மதுரை: தனுஷ் நடித்து ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தனுஷ் கர்ணன் படத்திற்கு தடைக்கோரி வழக்கு!

author img

By

Published : Mar 18, 2021, 12:44 PM IST

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் நடிப்பில் வெளியாக உள்ளது கர்ணன் என்ற திரைப்படம்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘பண்டாரத்தி - சக்களத்தி’ என்ற வார்த்தைகள் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. பண்டார சமுதாய மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்களை தாழ்த்தி பேசும் வகையில் உள்ளது. எங்கள் சமுதாய மக்கள் சுதந்திரத்திற்குப் பின்னரும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர்.

சக்களத்தி என்று அந்த பாடல்வரி அமைந்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் வாழும் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம், ஜங்கம் , யோகிஸ்வரர் ஆகிய சமுதாய மக்களின் உணர்வுகளையும், நன்மதிப்பையும் கெடுக்கும் வண்ணம் உள்ளது. இந்தப் பாடல் வரிகள், சினிமா கிராபிக்ஸ் சட்டம் 1952க்கு எதிரானது.

இது ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுப்படுத்தும், நன்மதிப்பை கெடுக்கும் வகையில், பாடல் வரிகள் அமைந்துள்ளன. இந்தப் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று தணிக்கை துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. இது ஏற்புடையதல்ல. சினிமாட்டோகிராபி சட்டத்தின்படி ஏற்புடையது அல்ல.

கர்ணன் திரைப்படத்தின் பாடலில் உள்ள பண்டாரத்தி - சக்காளத்தி என்ற பாடல் வரிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும். கர்ணன் படம் வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். பண்டாரத்தி - சக்காளத்தி என்ற பாடலை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, தனுஷ் நடித்து ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள கர்ணன் திரைபடம் வெளியிட தடை விதிக்க வேண்டும். பண்டாரத்தி - சக்காளத்தி என்ற பாடல் வரிகளை நீக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேலும், மனுதாரர் கோரிக்கை குறித்து, தணிக்கை துறையின் அலுவலர், தயாரிப்பாளர் கலை புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் , உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.