ETV Bharat / city

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில் சொத்துகளின் மூல ஆவணங்களைத்  தாக்கல் செய்ய உத்தரவு! - madurai hc

மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் சொத்துகளின் மூல ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

madurai
author img

By

Published : Apr 9, 2019, 3:18 PM IST

மதுரை பரவை அருகே உள்ள வடக்கு வாசல் பகுதியில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலின் 2 ஏக்கர் நிலங்கள் தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆகவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சொத்துப்பட்டியலின் மூல ஆவணம் எனப்படும் இனாம் பதிவேட்டு ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வகிக்கப்பட்டு பாதுகாக்க பட்டு வருகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த கோவில் மற்றும் பிற கோவில் சொத்துகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் சொத்துகளும் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில்தான் உள்ளன. இந்த மூல ஆவணங்கள் அடிப்படையில் மீண்டும் அளவீடு செய்தால் ஆக்கிரமிப்புகளை கண்டறியலாம் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில் சொத்துகளின் மூல ஆவணம் எனப்படும் இனாம் ஆவணங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வருவாய் துறை செயலர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் சொத்துகளின் மூல ஆவணங்களைத்  தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

தவறும் பட்சத்தில் வருவாய் துறை செயலர், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் - நீதிபதிகள் எச்சரிக்கை.

மதுரை பரவை அருகே உள்ள வடக்கு வாசல் பகுதியில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறைக்கு  உட்பட்ட இந்த கோவிலின் 2 ஏக்கர் நிலங்கள் தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

  ஆகவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சொத்துப்பட்டியலின் மூல ஆவணம் எனப்படும்  இனாம் பதிவேட்டு ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வகிக்கப்பட்டு பாதுகாக்க பட்டு வருகிறது  இந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த கோவில் மற்றும் பிற கோவில் சொத்துகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில்,  தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சொத்துகளும் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன. 

இந்த மூல ஆவணங்கள் அடிப்படையில் மீண்டும் அளவீடு செய்தால் ஆக்கிரமிப்புகளை கண்டறியலாம் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் ,"

 தமிழகத்தில்  இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் சொத்துகளின் மூல ஆவணம் எனப்படும் இனாம் ஆவணங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  சமர்ப்பிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் வருவாய் துறை செயலர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.