ETV Bharat / city

'முன்கள பணியாளர்களுக்கான நிவாரணங்களை அரசு சரியாக வழங்குகிறது' - நீதிபதிகள் கருத்து - tamil nadu government is properly providing relief

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணங்களை வழங்கி வருகின்றது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

'முன்கள பணியாளர்களுக்கான நிவாரணங்களை அரசு சரியாக வழங்குகிறது' - நீதிபதிகள் கருத்து

author img

By

Published : May 27, 2021, 11:05 PM IST

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஜலாலுதீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது வரை 89 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியா 8 மாதம் கருவுற்று இருந்த நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் வேலூர் பகுதியை சேர்ந்த செவிலியர் பிரேமா, சென்னையை சேர்ந்த செவிலியர் இந்திரா ஆகியோர் தற்போது கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கரோனா நோய் தொற்றின் காரணமாக முன்கள பணியாளராக இருக்கும் மருத்துவர், செவிலியர், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர் ஆகியோர் பலர் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துவருகின்றனர். இவர்களை இழந்த குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தற்போது வரை தமிழ்நாடு அரசு இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே, மருத்துவர் உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய், செவிலியர், காவல்துறையினர் உயிரிழந்தால் 25 லட்சம் ரூபாய், தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், முன்கள பணியாளர்களான மருத்துவர் உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய், செவிலியர், காவல்துறையினர் உயிரிழந்தால் 25 லட்சம் ரூபாய், தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த முன்கள பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணங்களை வழங்கி வருகின்றது. இது மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவு. எனவே நீதிமன்றம் இதில் புதிதாக உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.